பொதுமக்கள் கவனத்திற்கு
1. குப்பை கூளங்களையும், உபயோகத்திற்கு உதவாத பொருள்களையும் வெளியில் வீசி எறியாதீர்கள். அவற்றைச் சேகரிப்பதற்காக வைக்கப்படும் பீப்பாய்களில் அல்லது தொட்டிகளில் போடவும்.
2. பொது இடங்களிலும், பொதுச்சாலைகளிலும் எச்சில் துப்பாதீர்கள்.மேலும் பொது இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும்.
3. இரண்டு கைக்குட்டைகளைக் கையில் வைத்திருக்கவும். ஒன்றைச் சாதாரண உபயோகத்திற்கும், மற்றொன்றைத் தேவையேற்பட்டால் எச்சில் துப்புவதற்கும் உபயோகிக்கவும். இப்படி உபயோகித்த கைக்குட்டைகளைச் சோப்புப்போட்டுத் துவைத்து மீண்டும் உபயோகிக்கலாம்.
4. பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதை இயன்றவரை குறைக்கவும்.
5. குப்பைகளை அகற்றுவதுடன்,அவற்றைக் குழியில் போட்டு மூடுவதற்கும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கவும்.