அமலபாரதம் ( Amala Bharatam Campaign — ABC)என்ற அம்மாவின் நலத்திட்டம் வரும் நவம்பர் மாதம் 1ந்தேதி கேரளம் முழுவதும் பெரிய அளவில் தொடங்கப்பட இருக்கிறது. அக்டோபர் மாதம் 31-ந்தேதி கேரளத்தில் 14 மாவட்டங்களில் சுமார் 54 க்கு மேற்பட்ட பொது இடங்களில் அமல பாரதத் தொண்டர்கள் சமூக சேவகர்களின் உதவியுடன் தூய்மை செய்யும் பணி நிறைவடையும். அதேசமயத்தில் நவம்பர் 1ந்தேதி கேரள மாநிலத்திற்கு 54 வயது தொடங்குகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் அமல பாரதத் திட்டத்தின் தொண்டுகளின் முன்னோடியாக உற்சாகம் அளிக்கும் வகையில்தான் தற்போது இந்நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
பின்குறிப்பு : தற்போது தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நமது அமிர்தா பல்கலைக்கழக எட்டிமடை (கோவை ) வளாக மாணவர்கள் எட்டிமடை கிராமத்தைத் தூய்மைப்படுத்தினர்.